Latest Updates

Categories Post

சாய்ந்தமருது கடற்கரையில் சிலிண்டர் வடிவில் மர்மப் பொருள்!


அம்பாறை சாய்ந்தமருது பௌசி மைதானத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று மர்மப் பொருள் ஒன்று மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது. சிலிண்டர் வடிவில் காணப்பட்ட குறித்த பொருளின்மூடியின் உட்பாகத்தில் அடைக்கப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டு காணப்பட்டதனால் இது ஒரு வெடிக்கும் பொருளாக இருக்கலாமென சந்தேகித்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கல்முனை பொலிசாரும், மருதமுனை விசேட அதிரடிப் படையினரும் குறித்த பொருள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அறியக்கிடைக்கின்றது.

0 Response to "சாய்ந்தமருது கடற்கரையில் சிலிண்டர் வடிவில் மர்மப் பொருள்!"

Post a Comment