யாழ்ப்பாணத்தில் தற்போது பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் படும்பாடு சொல்லெணாத் துயரமாகி வருகின்றது.
இதனால் பிறக்கப் போகும் பிள்ளை பெண் பிள்ளையா? ஆண் பிள்ளையா? என்ற ஏக்கம் அனைத்துப் பெற்றோர்களின் உள்ளங்களில் உருப்பெறுகின்றது.
சில வேளைகளில் பெண் பிள்ளை என்று தெரிந்தவுடன், கருவழிப்புச் செய்யும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.
மேற்படி சம்பவங்கள் அதிகமாக இந்தியாவில் நடைபெறுகின்றதே தவிர யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவது அரிது, இல்லை என்றும் கூறலாம்.
இருந்தாலும் பெற்றோர்களின் மத்தியில் பிறக்கப் போகும் பிள்ளை தொடர்பில மனப் படபடப்பு இருப்பது சகஜமான ஒன்று.
ஆணாக இருந்தால் ஆனந்தம், பெண்ணாக இருந்தால் துன்பம் என்ற வரையறைக்குள் வந்து விட்டது யாழ்ப்பாணம்.
இதற்கெல்லாம் காரணம் இன்றைய சீதன நிலவரம். ஆண் பிள்ளை பெற்ற பெற்றோர்கள் திருமணம் செய்யப் பெண் எடுப்பதற்காக தாங்கள் பெற்ற ஆண் பிள்ளைகளை விலை பேசும் அளவுக்குத் தற்போது சூழ்நிலை மாறி விட்டது.
சீதனம் என்ற பெயரில் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கும் பெற்றோர்களை விட அரசியல்வாதிகள் மேல் என்று கூறலாம்.
எது எவ்வாறாயினும் பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் பாவம் என்றுதான் கூற வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இவ்வளவு சீதனக் கொடுமைகளுக்கு மத்தியில் 5 அல்லது 6 பெண் பிள்ளைகள் பெற்றெடுத்த பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்?
Categories Post
Home » Sri lanka news »
Srilanka »
Srilanka1
» யாழில் இன்றைய சீதன விபரம்! பெண் பிள்ளை பெற்றவர்களின் நிலை கவலைக்கிடம்!!
யாழில் இன்றைய சீதன விபரம்! பெண் பிள்ளை பெற்றவர்களின் நிலை கவலைக்கிடம்!!
Posted by kesa
on Tuesday, February 25, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழில் இன்றைய சீதன விபரம்! பெண் பிள்ளை பெற்றவர்களின் நிலை கவலைக்கிடம்!!"
Post a Comment