Latest Updates

Categories Post

சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் விரைவில் அமுல்!


சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் விசேட சட்ட மூலத்தை உருவாக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் இந்த சட்ட வரைபு நீதியமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக சட்டவாக்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யுத்த காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சாட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டம் மிகவும் அவசியமானது என சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் தடவையாக இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது எனினும், இந்த சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்பதுடன் உரிய நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாத காரணத்தினால் குறித்த உத்தேச சட்டம் பற்றிய விடயங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
சர்வதேச அழுத்தங்களின் காரணமாக அரசாங்கம் இப்புதிய சட்டத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

0 Response to " சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் விரைவில் அமுல்! "

Post a Comment