அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளப்போவதில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நார்வே நாட்டுத் தூதுவருக்கும், வட மாகாண முதலமைச்சருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இலங்கைக்கு எதிராக ஜெனிவா கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரனைக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஜெனிவா செல்லுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜெனிவா கூட்டத் தொடருக்கு நான் செல்ல மாட்டேன் ஏன் எனில் அதற்கான அவசியமும் இல்லை இங்குள்ள நிர்வாக கட்டமைப்புக்களையே நான் பார்த்துக் கொள்வேன் இத்தகைய அரசியல் ரீதியான விடயங்களை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

0 Response to " ஜெனிவாவுக்கு நான் செல்ல மாட்டேன்- அதற்கான அவசியமும் இல்லை. வடக்கு முதல்வர்! "
Post a Comment