Latest Updates

Categories Post

யாழில் மூன்று லட்சம் பெறுமதியான தாலிக் கொடி அறுத்தெடுக்கப்பட்டுள்ளது.



பிள்ளையுடன் மோட்டார் சையிக்கிளில் சென்ற இளம் பெண்னை மோட்டார்
சையிக்கிளில் இருந்து தள்ளி வீழ்த்திவிட்டு சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடியை அறுத்தெடுத்துச் சென்ற சம்பவம் நேற்று மதியம் சில்லாலைப் பகுதியில் இடம் பெற்றது .

பண்டத்தரிப்பு சந்தை பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் பெண் முன்பள்ளியில் தனது பிள்ளையை ஏற்றிக்கொண்டு சூட்டி பெப் மோட்டார் சையிக்கிளில் சில்லாலை செட்டி வீதி வழியாக வந்துகொண்டு இருந்த வேளையில் மோட்டார் சையிக்கிளில் பின்னால் தொடர்ந்து வந்த இரு ஆளைஞர்கள் ஆட்கள் அற்ற இடத்தில் குறிப்பிட்ட பெண்னையும் பிள்ளையையும் மோட்டார் சையிக்களில் இருந்து தள்ளி வீழ்த்திவிட்டு அவருடைய தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்கள் .

தலையில் அடியுண்ட பெண் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளார்கள் .

0 Response to "யாழில் மூன்று லட்சம் பெறுமதியான தாலிக் கொடி அறுத்தெடுக்கப்பட்டுள்ளது."

Post a Comment