Latest Updates

Categories Post

பளை வரையான பரீட்சார்த்த ரயில் சேவை.



கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ரயில் சேவையை விஸ்தரிக்கும் திட்டத்தின்கீழ்
நேற்று பளை வரையான பரீட்சார்த்த ரயில் சேவை நடத்தப்பட்டுள்ளது .

நேற்று காலை 10.20 இற்கு கிளிநொச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி ரயில் 10,43 இற்கு பளை ரயில் நிலையத்தை சென்றடைந்தது .

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் , உள்ளிட்ட பலர் இந்த பரீட்சார்த்த பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர் .

இதன் போது கிளிநொச்சி , பரந்தன் , ஆனையிறவு , பளை ஆகிய ரயில் நிலையங்களையும் இவர்கள் பார்வையிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் யாழ் தேவி பளை வரை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .


0 Response to "பளை வரையான பரீட்சார்த்த ரயில் சேவை."

Post a Comment