Latest Updates

Categories Post

அந்தமான் தீவுகளில் விடுதலைப்புலிகள்: இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை!

எஞ்சியுள்ள விடுதலைப்புலிகள் அந்தமான், நிகோபார் தீவுகளில் மறைந்து வாழலாம் என்று இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கள் வசிக்காத தீவுகளில் விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் தற்காலிக புகலிடம் தேடியிருக்கக் கூடும் என்று, இந்திய உள்துறை அமைச்சு, தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அந்தமான், நிகோபாரில் பாதுகாப்புத் தேடுவதற்கான வாய்ப்புக்களை, நிராகரிக்க முடியாது என்று, அந்தமான்,நிகோபார் யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மியான்மர், பங்களாதேஸ், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டவர்கள், அந்தமான், நிகோபார் தீவுகளுக்குள் நுழைந்துள்ளனர் என்று யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளதைப் போலவே, சிறிலங்கா தமிழர்கள் மீது அந்தமானில் உள்ள தமிழர்களும் அனுதாபம் கொண்டுள்ளதாக, யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 572 தீவுகளை கொண்ட இந்த நிலப்பகுதியில் 38 தீவுகளில் மட்டுமே ஆட்கள் வசிக்கின்றதாக சொல்லப்படுகின்றது.

0 Response to "அந்தமான் தீவுகளில் விடுதலைப்புலிகள்: இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை!"

Post a Comment