தமிழீழ எல்லாளன் படை என்ற அமைப்பின் முக்கிய நபர் ஒருவரான முத்துலிங்கம் மதியழகன் என்பவர் வல்வெட்டித் துறையில் வைத்து ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை உடனடியாக கொழும்பு கொண்டு சென்ற புலனாய்வு பிரிவினர் கடும் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் இவர் பல உண்மைகளை வெளியிட்டதாகவும் திவயின பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஐரோப்பா நாடுகளில் இந்த அமைப்பின் முக்கிய நபர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கும் வெகு விரைவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழீழ எல்லாளன் படை என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினரான ராம் சந்திரசேகரம் என்பவர் தற்போது பிரான்சில் வசித்து வருவதாகவும் இவர் சென்ற வருடம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் இவருக்கு எதிராக வெகு விரைவில் சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories Post
எல்லாளன் படை என்ற அமைப்பின் முக்கிய நபர் கைது
Posted by kesa
on Sunday, February 16, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "எல்லாளன் படை என்ற அமைப்பின் முக்கிய நபர் கைது "
Post a Comment