Latest Updates

Categories Post

நவநீதம் பிள்ளையின் அறிக்கை மஹிந்தவிடம் கையளிப்பு

மனிதஉரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில்
ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் , சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக தரத்திலான விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் , அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

ஐ . நா மனிதஉரிமைகள் பேரவையில் , கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய , ஐ . நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை , அடுத்த மாதம் நடைபெற உள்ள அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார் .

இந்த அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு , சிறிலங்கா அரசாங்கத்தின் பார்வைக்காக , ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஊடாக கடந்த வாரம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது .

சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக குற்றம்சாட்டும் வகையிலான இந்த அறிக்கை 20 பக்கங்களைக் கொண்டதாகவும் , 74 குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் , அமைந்திருந்தது . இதுகுறித்துப் பதிலளிக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ . நா மனிதஉரிமை ஆணையாளரால் கடந்த 12 ம் நாள் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது .

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதற்கு பதில்களை வழங்கி மனித உரிமை ஆணையாளர் பணியகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது

சாட்சிகளைப் பாதுகாத்தல் , தகவல் உரிமை , பலவந்தமாக காணாமற்போதல் குற்றங்கள் போன்றன குறித்த தற்போதுள்ள சட்டங்களை மீளாய்வு செய்து , அனைத்துலக மனிதஉரிமை சட்டத்தின் தரத்துக்கு கொண்டு வர வேண்டும் . பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி , தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கான விதிமுறைகளை நீக்க வேண்டும் . சிறுபான்மை சமூகத்தினர் , ஊடகங்கள் , மனிதஉரிமை ஆர்வலர்கள் , சாட்சிகள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் .

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் உள்ளிட்ட , மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அனைத்துலக உதவியுடன் , சுதந்திரமான , நம்பகமான குற்றவியல் மற்றும் தடயவியல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் .

அனைத்துலக தரத்துக்கேற்ப விரிவான , அணுகுமுறையின் ஒரு பகுதியாக , இடைக்கால நீதியை வழங்கும் விதத்தில் , தேசிய இழப்பீட்டுக் கொள்கையை உருவாக்குவதற்கு உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் .

இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் இறுதி அறிக்கை 2006 ம் ஆண்டு சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை என்பனவற்றை பகிரங்கப்படுத்தி , அண்மையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அந்த சான்றுகளை மதிப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும் .

படைக்குறைக்குப்பு மேலதிக நடவடிக்கைகளை எடுத்து , படைக்கலைப்பு , ஆயுதக்களைவு , பொதுமக்களின் செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு தெளிவான காலஎல்லையை வகுக்க வேண்டும் .

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பொருத்தமான நினைவுச்சின்னங்களை அமைப்பது குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் . எல்லா பொதுமக்களும் , தனியாகவோ குழுவாகவோ , நினைவு கூரும் உரிமையை வழங்க வேண்டும் ,

ஐ . நா மனிதஉரிமை ஆணையாளரின் தொழில்நுட்ப உதவியை ஏற்பது குறித்து சாதகமான கருத்தை வெளிப்படுத்த வேண்டும் . பலவந்தமாக காணாமற்போனவர்கள் குறித்த பணிக்குழு மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சுதந்திர நிபுணர் உள்ளிட்ட , 2014 சிறப்பு ஆணையாளர்களுக்கு ம் ஆண்டில் அழைப்பு விடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

0 Response to "நவநீதம் பிள்ளையின் அறிக்கை மஹிந்தவிடம் கையளிப்பு"

Post a Comment