பிரித்தாணிய ரோயல் கடற்படையின் முன்னாள் தளபதியும் தற்பொழுது சீசல் நாட்டில் உள்ள யு.என் உலக நாடுகளின் கடற்பாதுகாபப்பு வன்முறை சம்பந்தமான யு.என் ஓ.டி சி யின் சிரேஸ்ட பணிப்பாளருமான ரொப் மெக்லைன் கடந்த வாரம் இலங்கை வந்திருந்தார்.
அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நீதி அமைச்சர் மற்றும் ரானுவம் கடற்படைத் தளபதி பொலிஸ் நிர்வாகம் சம்பநதமான சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரையும் கண்டு மேற்படி விடயமாக பேச்சுவார்த்தை நடாத்தினார்.
இச் சந்திப்பு சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி ஊடகங்களுக்கு தகவல் தருகையில் -
இலங்கையில் அண்மைக்காலமாக கடல் மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் போதைப்பொருள் கடத்துதல் அல்லது பாவணை பெருமளவில் பெருகியுள்ளது. மேற்படி விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் விசேட கூட்டத்தில் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துதல் நாடாளரீதியில் போதைப்பொருள் வியாபாரிகள், கடத்துபவர்கள், இத் தொழில் ஈடுபடுவோர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு பாரிய அளவிலான வேலைத்திட்மொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியான ஒரு பிரிவும் இயங்க உள்ளது. அத்துடன் கடற்படை இரானுவமும் இதில் கூட்டாக செயல்படும்.
பாடசாலை ஓரங்களில் டொபி, கஜான் அல்லது ஒருவகை டொபி விற்பணையாளர்களை பரிசீலனை செய்யப்படும். அத்துடன் கடலோர பாதுகாப்பு உலகலாவிய ரீதியில் கண்கானிக்கப்பட்டு ஒரு கூட்டு முறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் செயலளார் தெரிவித்தார்.
0 Response to " கடல்மார்க்கமான போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஐ.நா வுடன் இலங்கையும் இணைகின்றது. "
Post a Comment