Latest Updates

Categories Post

கிராம முன்னேற்றம் என்பது கிராமங்களின் கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன்.



கிராமங்கள் சகல துறைகளிலும் நிரந்தர முன்னேற்றம் அடைய வேண்டுமாயின் முதலில் கிராமங்கள் கல்வியில் வளர்ச்சி அடைய வேண்டும். கல்வி வளர்ச்சி ஊடாகவே நிலையான அபிவிருத்தியை அடைய முடியும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் படசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கிளிநொச்ச மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு வகையில் புறகணிப்புகளுக்கு உள்ளான கிராமங்களில் பெருமளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது இது வெளிப்படையாகவே தெரிகின்ற உண்மை. மீள்குடியேற்றத்திற்கு பின்னரான காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் அனைத்து அபிவிருத்தி செயற்பாடகளிலும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வந்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும் குறிப்பாககிராமங்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடது.

அதனடிப்படையிலேயே இந்த ஊற்றுப்புலம் பாடசாலைக்கும் இந்த கல்விச் சமூகத்தால் கோரிக்கைகள் விடுக்கப்படாத நிலையிலேயே பாடசாலையின் தேவையினை உணர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒக்கீட்டின் மூலம் வகுப்பறை கட்டிடத்தொகுதி அமைத்துகொடுக்கப்பட்டது. மேலும் இக் கிராமத்தின் தேவைகள் தொடர்பில் அதிக கவனம் எடுத்து செயற்பட்டுள்ளோம்ää செயற்பட்டும் வருகின்றோம். ஊற்றுப்புலம் கிராமத்தின் வரலாற்றில் தற்போதே எங்களது நடவடிக்கைகள் காரணமாகவே பலர் நிரந்தர அரச தொழில் வாய்ப்பினை பெற்றுள்ளனர் எனத்தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் அவர்கள்

ஒரு கிராமத்தின் பாடசாலை என்ற நிலைக்கு அப்பால் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் சிறப்பாக நடந்துள்ளமை பாராட்டத்தக்கது இதற்காக உழைத்த அதிபர்ääஆசிரியர்கள்ää பெற்றோர்கள் மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்கள்ää பெற்றோர்களின் பங்களிப்பு அதிகமாக காணப்படுகின்றமை மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் முக்கியமாக மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்ற இக்கிராத்திற்கான மின்சாரம் விநியோகம் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இன்னும் ஒரு சில நாட்களில் உரிய அதிகாரிகள் இங்கு வருகை தந்து மதிப்பீடுகளை மேற்கொண்டு மின்விநியோக பணிகள் இடம்பெறும் என உறுதியளித்த அவர் தொடர்ந்தும் ஊற்றுப்புலம் கிராமத்தின் முன்னேற்றத்தில் அக்கறையோடு செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

ஊற்றுப்புலம் பாடசாலை முதல்வர் ம.உமாசங்கர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி கல்வி வலய நிர்வாக பிரதி கல்விப்பணிப்பாளர்சி.இதயராஜாääகிராம அலுவலர் சி. சிவனேசன்ää மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

0 Response to "கிராம முன்னேற்றம் என்பது கிராமங்களின் கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன்."

Post a Comment