Latest Updates

Categories Post

பப்புவா நியூ கினியா தடுப்பு முகாமில் கலவரம்; ஒருவர் பலி!


இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் தங்கியுள்ள தென் பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவின் மனுஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுள்ள வன்முறையில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 77 பேர் காயமடைந்துள்ளனர்.

தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்ததாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட் மோரிஸன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் படுகாயமடைந்துள்ள 13 பேரில் இருவர் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பதுடன் இதில் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தால் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி முகாமிலிருந்து சிலர் தப்பிச்சென்றதைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்ததுடன் முகாமுக்கு வெளியில் இந்த வன்முறைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலைவரை நடைபெற்றுள்ளதாகவும் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார்.

0 Response to " பப்புவா நியூ கினியா தடுப்பு முகாமில் கலவரம்; ஒருவர் பலி! "

Post a Comment