அன்புடையீர்,
"புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்தின்" பொதுக்கூட்டம் எதிர்வரும் 23.02.2014 காலை 10 மணிக்கு BERN மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் 2014ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை தெரிவும், எமது ஊரிற்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் பற்றியும், கலந்து ஆலோசித்து முடிவு செய்ய விருப்பதனால் சுவிற்சர்லாந்தில் வாழும் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், செயற்பாடுகளையும் தந்துதவுமாறு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
• இறைவணக்கம்
• தலைமையுரை
• செயலாளர் அறிக்கை
• பொருளாளர் அறிக்கை
• யாப்பு மீள் அறிமுகம்
• மக்கள் கருத்துப்பகிர்வு
• புதிய நிர்வாகத்தெரிவு
• புதிய நிர்வாக உறுப்பினர் கருத்துரை
• நன்றியுரை
*முக்கிய குறிப்பு: ஒன்றியத்தின் மாதாந்த அங்கத்துவப்பணமான 10 x 12 - Sfr. 120.00வருட சந்தாவை செலுத்தி, அங்கத்துவராக இணைந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கூட்டம் நடைபெறும் இடம்:
Kleefeldzentrum
Mädergutstrasse 05
3018 Bern
தொடர்புகளுக்கு:
தலைவர் - இரா.ரவீந்திரன் -079 218 70 75
பொருளாளர் - இ.சிறிதாஸ் -079 228 67 45
செயலாளர் - அ.நிமலன் -079 124 45 13
**உங்கள் வருகை ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும் என்பதே எம் அனைவரின் அவா!
'மண்ணின் சேவையே – மகத்தான சேவை'
நன்றி.

0 Response to "புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிற்சர்லாந்தின்" பொதுக்கூட்ட அறிவித்தல்!! "
Post a Comment