Latest Updates

Categories Post

சதொச நிறு­வனம் மீண்டும் உரு­ளைக்­கி­ழங்கு கொள்வனவில் தாம­தம். விவ­சா­யிகள் ஏமாற்­ற­ம்.

யாழ் . மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள உருளைக்கிழங்கை கொள்வனவு செய்வதில்
சதொச நிறுவனம் மீண்டும் தாமதித்து வருவதால் கடந்த 10 தினங்களுக்கு மேலாக விவசாயிகள் ஏமாற்றமடைந்ததோடு கிழங்குகளை தனியார் துறையினருக்கும் தம்புள்ளை மத்திய சந்தைக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர் .

யாழ் . மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை கொள்வனவு செய்வதற்கு பலத்த இழுபறிக்கு மத்தியில் ஏற்றுக்கொண்ட சதொச நிறுவனம் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 70 ரூபா என்னும் அடிப்படையில் கொள்வனவு செய்தது .

ஆனால் இதுவரையில் ஏழு லொறி கிழங்கு மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது . அதற்கமைய ஒரு லொறியில் 240 தொடக்கம் 250 மூடைகள் ஏற்றிச் செல்லப்பட்டன .

ஒவ்வொரு மூடையும் 50 தொடக்கம் 53 கிலோ நிறை அளவு கொண்ட வகையில் சராசரியாக ஒவ்வொரு லொறியில் 13 ஆயிரம் கிலோ வரையில் ஏற்றிச் செல்லப்பட்டது .

கொள்வனவில் ஏற்பட்ட தேக்க நிலையை சீர்செய்வதற்கு அமைச்சர் மற்றும் அரச சார்பு உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலையிட்டு களநிலையை நேரில் பார்வையிட்டு கடந்த சனிக்கிழமை மீண்டும் உருளைக்கிழங்கு கொள்வனவு ஆரம்பமாகும் என உறுதி அளித்தமையினால் ஒரு லொறியில் ஏற்றக்கூடிய அளவு கிழங்கை அறுவடை செய்து ஏற்றுவதற்கு தயாராக இருந்தபோதிலும் கிழங்குக் கொள்வனவு நடைபெறவில்லை . இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் மனம் நொந்த நிலையில் தனியார் துறையினருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

யாழ் . மாவட்டத்தில் உற்பத்தி செய்த உருளைக்கிழங்கில் பெரும்பகுதி அறுவடை செய்யப்பட்ட போதிலும் 35 தொடக்கம் 40 வீதம் வரையில் அறுவடை செய்யப்படாமல் உள்ளது . தற்பொழுது கடும்வெப்ப நிலை வீச்சும் வரட்சியான காலநிலையும் காணப்படுவதால் கிழங்குகள் பழுதடையக் கூடிய ஏதுநிலை காணப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் .

சதொச நிறுவனம் உருளைக்கிழங்கு கொள்வனவு விடயத்தில் பொருத்தமான பதிலைக் கூட உரிய முறையில் தெரிவிக்காமல் இழுத்தடிப்பதாக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் யாழ் . மாவட்ட சமாச நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

உருளைக்கிழங்கு கொள்வனவு தொடர்பாக சதொச அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கையில் ,

யாழ் . மாவட்டத்தில் கிலோ 70 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் உருளைக்கிழங்கு சதொச நிறுவன கிளைகள் ஊடாக கிலோ 75 ரூபா வீதம் விற்பனை செய்யப்படுகிறது . அதேநேரம் விவசாயிகள் இயல்பு நிலையில் விற்பனை செய்யமுடியாத சிறிய கிழங்குகளையும் வெட்டுப்பட்டு சேதமடைந்த கிழங்குவகையையும் மூடைகளில் போடுவதோடு சில சந்தர்ப்பங்களில் ஈரமண்ணோடு கூடிய நிலையிலும் கிழங்கை மூடையாக்கியுள்ளனர் .

யாழ் . மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மூலம் நிறுவனத்திற்கு பல இலட்சம் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது . யாழ்ப்பாண உரு ளை க்கிழங்கு தம்புள்ளை மத்திய சந்தையில் 65 ரூபா தொடக்கம் 67 ரூபா வீதம் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றது எனத் தெரிவித்தார் .

0 Response to "சதொச நிறு­வனம் மீண்டும் உரு­ளைக்­கி­ழங்கு கொள்வனவில் தாம­தம். விவ­சா­யிகள் ஏமாற்­ற­ம்."

Post a Comment