பிரான்சிஸ்கா தியதா என்ற இத்தாலிய பெண் 2011 ஆம் ஆண்டு இலங்கையில் ஹோட்டல்ஒன்றில் தங்கியிருந்த போது தன்னிடம் இருந்த 700 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் .
அதனைதொடர்ந்து ஹோட்டல் ஊழியரான தனஞ்ஜய பிரபாத் என்ற நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
அதில் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பதியப்பட்ட காட்சிகளை பொலிஸார் சந்தேக நபருக்கு எதிரான சாட்சியமாக முன்வைத்துள்ளனர் .
இந் நிலையில் இத்தாலியில் இருக்கும் சாட்சியாளர் ஒருவரிடம் சாட்சியத்தை பெற ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார் .
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பயிற்சி நிறுவனத்தின் சுயாதீன கண்காணிப்பாளர் ஒருவரின் வழிகாட்டலில் எதிர்வரும் மார்ச் 14 ம் திகதி ஸ்கைப் மூலம் சாட்சியத்தை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்
0 Response to "ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் இலங்கை நீதி துறையின் வரலாற்றில் முதல் முறையாக சாட்சியம்"
Post a Comment