Latest Updates

Categories Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

யங்கரவாதத் தடைச் சட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முகமாலையில்
வைத்து கைது செய்யப்பட்ட வவுனியா ஈச்சங்குளம் பகுதியினைச் சேர்ந்த ஜெகநாதன் முகுந்தன் என்ற நபரை விடுதலை செய்து யாழ் . மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இன்று ( 24 ) தீர்ப்பளித்தார் .

2006 - 2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 4 ஆம் திகதி மேற்படி நபர் முகமாலையில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் . குறித்த நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த ஆண்டு ( 2013 ) ஜனவரி முதலாம் திகதி யாழ் . மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது .

அத்துடன் குறித்த நபர் பூஸா தடுப்பு முகாமில் வைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ் . மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது .
மேற்படி வழக்கில் வேறு சாட்சிகள் உள்ளனவா ? என்று பார்ப்பதற்காக மேற்படி வழக்கு இன்று ( 24 ) வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது .

தொடர்ந்து மேற்படி வழக்கு இன்று ( 24 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நபருக்கு எதிராக வேறு சான்றுகள் நிரூபிக்கப்படாததால் மேற்படி நபரினை விடுதலை செய்யுமாறு நீதிபதி தீர்ப்பளித்தார் .

0 Response to "பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை"

Post a Comment