Latest Updates

Categories Post

சர்வதேச கிரிமினல் கே.பி யை புலிகள் நம்பியிருந்தனர்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாட்சி

வாகை தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிக முக்கிய சாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசின் சரணடைவு நாடகத்தில் படுகொலை செய்யப்பட்ட புலித் தேவன், நடேசன் ஆகியோர் கே.பி உடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனைப் புலிகளே உறுதிப்படுத்தியதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வந்து காப்பற்றும் என நம்பவைத்து லட்சக்கணக்கான மக்களைக் கொலைக்குக் காரணமாகவிருந்த இலங்கை அரச உளவாளி எனக் கருதப்படும் கே.பி என்ற புலிகளின் உயர் மட்ட உறுப்பினர் புலிகளை வழி நடத்தியுளார் என்பதும் இதனூடாகப் புலனாகிறது.

இலங்கை அரசு நடத்திய தமிழினப் படுகொலையின் பின்புலத்தில் புலிகளின் பல உயர் மட்ட உறுப்பினர்களும் செயற்பட்டுள்ளனர்.

புதிய கலாச்சார, அரசியல் மாற்றங்கள் ஊடாக மக்களை அணித்திரட்டி பிரிந்துசெல்லும் உரிமைக்காகப் போராட வேண்டிய நிலையில் அதிகாரவர்க்கம் சார்ந்த அரசியல் லட்சக்கணக்கான மக்களை இலங்கைப் பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு இரையாக வழங்கியுள்ளது.

0 Response to "சர்வதேச கிரிமினல் கே.பி யை புலிகள் நம்பியிருந்தனர்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாட்சி"

Post a Comment