Latest Updates

Categories Post

நுவரெலியாவில் பனி மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் பனி மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இயற்கை அழகை ரசிப்பதற்காக நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பனிப் பொழிவின் காரணமாக மரக்கறிச் செய்கையும் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் ,தொழிலாளர்கள் தெரிவிக்கின்றதுடன் சில பிரதேசத்தில் காணப்படும் மரக்கறி தோட்டங்கள் பனியினால் மூடப்பட்டு காணப்படுகின்றது எனவே பனிமூட்டம் தற்போது அதிகரித்துக் காணப்படுவதால் சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 Response to "நுவரெலியாவில் பனி மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!"

Post a Comment