Latest Updates

Categories Post

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகள் உதவ வேண்டும்- நார்வே தூதரிடம் யாழ்.அரசங்க அதிபர் வேண்டுகோள்!


போரால் பாதிக்கப்பட்ட மக்களுடைய உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நார்வே தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நார்வே நாட்டுத் தூதுவர் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த வேண்டு கோளை விடுத்தாதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தின் துறைசார் நிலைமைகள் தொடர்பாகவும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது இங்கு பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன இதில் குறிப்பாக, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் உட்பட வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கப்பட வேண்டியிருக்கின்றது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியதாக அவர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

எனவேஇதற் கு நார்வேயும் உதவ வேண்மெனவும் கோரிக்கை விடுத்ததாகவும் இந்தக் கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் நார்வே தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

0 Response to "போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகள் உதவ வேண்டும்- நார்வே தூதரிடம் யாழ்.அரசங்க அதிபர் வேண்டுகோள்!"

Post a Comment