காதலித்து பதிவுத்திருமணமும் முடித்திருந்தநிலையில் யுவதி ஒருவர் அமெரிக்காவில் நிரந்தர வதிவிடம் கொண்ட யாழ் இளைஞனை திருமணம்
முடித்து பதிவுத் திருமணம் செய்த காதலனை நடுத்தெருவில் விட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில்
நிகழ்ந்துள்ளது
பிரபல கல்லூரியில் பயின்ற குறிப்பிட்ட யுவதி பின்னர் வங்கி ஒன்றில் பணிபுரிந்து
வந்துள்ளார். இந் நிலையில் தனது நீண்டநாள் நண்பனாக இருந்த இளைஞனை காதலிப்பதாகக் கூறி
அவனைப் பதிவுத் திருமணமும் செய்துள்ளார். காதலனின் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்
பதிவுத் திருமணம் பற்றிய தகவல்கள் யுவதியின் பெற்றோருக்கும் தெரிய வந்து குறித்த
காதலனை யுவதியின் வீட்டுக்கும் வந்து செல்ல அணுமதித்துள்ளனர். இது இவ்வாறு இருக்க
குறிப்பிட்ட யுவதி தனது ஸ்கைப் தொடர்பின் மூலம் அமெரிக்காவில் நிரந்தர வதிவிடமாக
இருக்கும் இளைஞர் ஒருவரை தொடர்பு கொண்டு அவருடன் நட்பாகியுள்ளார்.
இந் நட்பு பதிவுத் திருமணம் செய்த காதலனுக்கு தெரியாமலே தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில்
அமெரிக்காவில் இருந்த குறிப்பிட்ட இளைஞர் தனது விருப்பத்தை யுவதிக்குத்
தெரிவித்துள்ளார். யுவதியும் அவனை திருமணம் முடிக்க விருப்பம் உள்ளதாகவும் ஆனால் தான்
ஒருவரால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் பொய்யாகத் தெரிவித்த்த போது அதனை ஏற்ற அமெரிக்க
இளைஞனும் தனது பெற்றோர் மூலம் குறித்த யுவதியின் வீட்டுக்கு தூது அனுப்பியுள்ளார்.
அமெரிக்க மாப்பிளையின் ஆசையில் பெற்றோரும் இதற்குச் சம்மதித்துள்ளதாகத் தெரியவந்தது.
இதற்கிடையில் குறித்த யுவதியின் கணவர் இவ் விடயத்தை அறிந்து யுவதியைக் கேட்ட போது
யுவதி குறித்த கணவரை ஏசித் துரத்தியதாகவும் தனக்கும் உனக்கும் இடையில் எதுவுமே
நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சிடைந்த பதிவுத் திருமணம் செய்த இளைஞர் குறித்த அமெரிக்க மாப்பிளையின்
உறவினர்களுக்கு தனது திருமணத்தைப் பற்றி எடுத்துக் கூறியிருந்தார். உறவினர்களும் அதை
ஏற்றுக் கொண்டு அமெரிக்க மாப்பிளைக்கு தெரிவித்த போதும் அமெரிக்க மாப்பிளை அவர்கள்
தெரிவித்தவற்றை எல்லாம் புறந்தள்ளி யுவதியை திருமணம் செய்ய முயன்றதாகத்
தெரியவருகின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த யுவதியின் சட்டப்படியான கணவர் நீதிமன்றத்தை
நாடியதாகவும் தெரியவருகின்றது. இருப்பினும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்
கொண்டிருக்கையிலேயே யுவதி கொழும்பு சென்று அமெரிக்க மாப்பிளையைக் கைப் பிடித்துள்ளார்.

குறித்த பெண்ணின் பெற்றோர் மிகவும் கௌரவமான குடும்ப சூழ்நிலையைக் கொண்டிருந்தும் மகளின்
இவ்வாறான தவறான நடவடிக்கைக்கத் துணைபோனது அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாக கணவரின்
நண்பர்கள் தெரிவித்துள்ளனர். யுவதியின் பாட்டனார் புகழ் பெற்ற ஒரு சட்டத்தரணி எனவும்
தெரியவருகின்றது.
இதே வேளை குறித்த யுவதியைப் பற்றி யுவதி பணியாற்றிய வங்கி ஊழியர்கள் மற்றும் பலரும்
யுவதியின் சட்டப்படியான கணவருக்கு பல பாலியல் தவறுகள் தொடர்பான முறைப்பாடுகளையும்
தெரிவித்தும் கணவரான இளைஞர் தற்போதும் யுவதி தன்னை ஏமாற்றிய நினைவில் இருப்பதாகத்
தெரியவருகின்றது.
யுவதியை திருமணம் செய்த அந்த அமெரிக்க மாப்பிளையை எண்ணி அழுவதா சிரிப்பதா எனத்
தெரியவில்லை என யுவதியின் சட்டப்படியான கணவனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Response to " வெளிநாட்டு மாப்பிளைக்காக உள்ளூர் காதலனை நடுத்தெருவில் நிறுத்திய யாழ் யுவதி"
Post a Comment