மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியாக கருதப்படும்
வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட பன்சேனை பகுதியில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி அரிக்கன் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன . வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பன்சேனை பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல தடைகளை எதிர்கொண்டுவருகின்றனர் .
இது தொடர்பில் மண்முனை மேற்கு கல்விப்பணிப்பாளர் கே . பாஸ்கரன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த அரிக்கன் விளக்குகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன .
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் உறவுகளின் லெடர் ( ஏணிகள் ) அமைப்பின் மூலம் பன்சேனையில் உள்ள 300 குடும்பங்களுக்கு இந்த விளக்குகள் வழங்கிவைக்கப்பட்டன .
இதனை வழங்கிவைக்கும் நிகழ்வு பன்சேனை பாரி வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் வ . சுந்தரநாதன் தலைமையில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் லெடர் அமைப்பின் இணைப்பாளரும் யாழ் . பல்கலைக்கழக புவியியல் பீட விரிவுரையாளருமான பேராசிரியர் குகபாலன் , கிழக்கு பல்கலைக்கழக கலை , கலாசார பீட பீடாதிபதி கலாநிதி இராஜேந்திரம் மற்றும் மண்முனை மேற்கு கல்விப்பணிப்பாளர் கே . பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர் .
வடக்கு பகுதியான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்புடன் பல்வேறு உதவித்திட்டங்களை மேற்கொண்டுவரும் லெடர் அமைப்பானது கிழக்கு மாகாணத்திலும் யுத்ததத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது .
இதன் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல வாழ்வாதார திட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றது .
எதிர்வரும் காலத்தில் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் தேவைகளை பூர்த்திசெய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் லெடர் அமைப்பின் இணைப்பாளரும் யாழ் . பல்கலைக்கழக புவியியல் பீட விரிவுரையாளருமான பேராசிரியர் குகபாலன் தெரிவித்தார் .
மாணவர்கள் இரவு வேளைகளில் தமது கற்றல் நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த அரிக்கன் விளக்குகள் பெற்றுக்கொடுக்க ப்பட்டுள்ளன . எமது மாணவர்களின் எதிர்காலமே முக்கியம் . அவற்றினை கருத்தில்கொண்டே நாம் பயணிக்கவேண்டும் என மண்முனை மேற்கு கல்விப்பணிப்பாளர் கே . பாஸ்கரன் தெரிவித்தார்
Categories Post
Home » Sri lanka news »
Srilanka »
Srilanka2
» புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் முந்நூறு குடும்பங்களுக்கு அரிக்கன் விளக்கு.
புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் முந்நூறு குடும்பங்களுக்கு அரிக்கன் விளக்கு.
Posted by kesa
on Wednesday, February 12, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் முந்நூறு குடும்பங்களுக்கு அரிக்கன் விளக்கு."
Post a Comment