கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய முறையில் சிகிச்சைகள்
வழங்கப்படுவதில்லையெனவும் நீண்ட நேரம் காத்திருந்தும் நோயாளர்கள் பலர் சிகிச்சைபெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் சம்பவங்களும் நடைபெறுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .
மேற்படி வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனைகளுக்காகச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் உரிய வைத்தியர் இல்லாமையால் பல மணி நேரம் காத்திருந்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர் . இதனை விட அண்மையில் கத்தி வெட்டுக் காயத்திற்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு இருபத்திநான்கு மணி நேரங்களிற்குப் பின்னரே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாமை , வைத்தியர்கள் உரிய நேரத்திற்கு வராமை போன்ற செயற்பாடுகளால் தொலைதூர இடங்களிலிருந்து வருகின்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர் .
இந்நிலையில் இவ்வைத்தியசாலை வளாகத்திற்குள் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை கடமையில் இருக்கின்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வைத்தியசாலை பொறுப்பு வைத்தியரைச் சந்திக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு முற் றாக அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் .
குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் ப . கார்த்திகேயனைத் தொடர்பு கொண்டுகேட்டபோது , மேற்படி கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படாமை தொடர்பான எந்த முறைப்பாடுகளும் எனக்குக் கிடைக்கவில்லை . நோயாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்திற்கொண்டு ஊடகவியலாளர்களை ஆரம்பத்திலிருந்தே ஒளிப் படம் எடுக்க அனுமதிப்பதில்லை . செய்தித் தகவல்களைப் பெற்றுக்கொள்ள உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்
Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை. ஊடகவியலாளர்களுக்கும் உட்செல்லத்தடை.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை. ஊடகவியலாளர்களுக்கும் உட்செல்லத்தடை.
Posted by kesa
on Wednesday, February 12, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை. ஊடகவியலாளர்களுக்கும் உட்செல்லத்தடை."
Post a Comment