யாழில் கைதுசெய்யப்பட்ட ' டில்லு ' குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையைச்
சேர்ந்த நால்வர் நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் , அவர்களில் ஒருவர் விமானப்ப டையில் இருந்து விலகியவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
ஜா - எல பகுதியைச் சேர்ந்த இருவரும் கொட்டாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அங்கொடையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
கடந்த சனிக்கிழமை டில்லு குழு என்னும் 9 பேரைக் கொண்ட குழுவொன்றை கொக்குவில் தலையாழி பகுதியில் பதுங்கியிருந்தபோது பொலிஸார் கைதுசெய்திருந்தனர் .
அவர்களிடம் இருந்து இரண்டு இராணுவச் சீருடை உட்பட வாள்கள் , கத்திகள் என்பன கைப்பற்றப்ப ட்டி ருந்தன .
அவர்கள் அனைவரும் மறுநாள் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு நால்வர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய ஐவரையும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
இந்நிலையில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் டில்லு குழு கைது செய்ய ப்பட்ட கொக்குவில் - தலையாழி பகுதியில் வைத்தே இந்த நான்கு பேரையும் நேற்றைய தினம் கைது செய்தனர் .
இவர்கள் நால்வரும் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது .
Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» யாழ். டில்லு குழுவில் சேர்ந்து செயற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது.
யாழ். டில்லு குழுவில் சேர்ந்து செயற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது.
Posted by kesa
on Wednesday, February 12, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழ். டில்லு குழுவில் சேர்ந்து செயற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது."
Post a Comment