தென் மேற்கு பாகிஸ்தானில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜோடியொன்றுக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் மதத் தலைவர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே மேற்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து குவேதா நகரிலிருந்து 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மான்ஸகேயி கிராமத்தைச் சேர்ந்த மேற்படி மதகுரு உள்ளடங்கலாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஜோடி கல்லால் எறிந்து தாக்கப்பட்ட பின் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நோடோடி இனமொன்றைச் சேர்ந்த மேற்படி ஆணும் பெண்ணும் தத்தமது வாழ்க்கைத் துணைகளுக்கு துரோகம் செய்யும் வகையில் இரகசிய காதல் தொடர்பை பேணி வந்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் குடும்ப கெளரவத்தின் பெயரால் வருடந்தோறும் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Response to "பாகிஸ்தானில் ஜோடியொன்றுக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை"
Post a Comment