Latest Updates

Categories Post

பதுளை மாநகர சபைக்கு ஒரு கோடி ரூபா வரையில் வரிப்பணம் பாக்கி.

பதுளை மாநகர சபைக்கு அதன் எல்லைக்குட்பட்ட 93 வர்த்தக நிலையங்கள் மற்றும்
வீட்டு உரிமையாளர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஒரு கோடி ரூபா வரையில் வரிப்பணம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் தத்தமது நிலுவை வரிப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் அடுத்து வரும் ஏழு தினங்களில் நிலுவைக் கட்டணத்தை பெற்றுக்கொள்வதற்கான சட்ட பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று மாநகர சபை வருமான வரிப் பிரிவினர் தெரிவித்தனர் .

பதுளை மாநகர சபை எல்லைக்குட்பட்ட 93 வர்த்தக நிலையங்களிடமிருந்து எழுபத்தைந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து இருபத்திநான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுமாக வரிப்பணம் நிலுவையாக இருந்து வருகின்றது என அவர்கள் மேலும் தெரிவித்தனர் .

0 Response to "பதுளை மாநகர சபைக்கு ஒரு கோடி ரூபா வரையில் வரிப்பணம் பாக்கி."

Post a Comment