Latest Updates

Categories Post

இறைச்­சிக்­காக மாடு­களை கொல்­வதை உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்­த­வேண்டும். சகல சமய நிறு­வ­னங்­களின் இணை­யத்­தினர் கோரிக்கை

இலங்கையில் பசுவதையை முற்றாகத் தடைசெய்யவேண்டும் என பசுக்கள் மற்றும்
இடங்களைப் பாதுகாப்பதற்கான சகல சமய நிறுவனங்களின் இணையத்தினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர் .

அக் கோரிக்கையில் , இலங்கையில் சுதேச சிங்கள தமிழ் பண்பாட்டு கலாசாரங்களின் படி பசுவதை என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை . வெளிநாட்டுப் படை யெடுப்புக்கள் , கலாசார ஊடுருவல்களினாலேயே பசுவதை செய்தல் , மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் என்பன இலங்கையில் ஏற்பட்டுள்ளன .

பசுவதையினால் பூரண நிறையுணவாகிய பாலிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கை மக்களின் ஆரோக்கியம் கெட்டு நோயாளிகளாகின்றனர் . நிறையுணவாகிய பாலிற்காக வெளிநாடுகளிடம் இருந்து பாலுணவை இறக்குமதி செய்யவேண்டியுள்ளது . அந்நிய செலாவணி வீணாகிறது . மனித உடலிற்குத் தீங்கில்லாத இயற்கைப் பசளையாகிய மாட்டெரு பற்றாக்குறையால் இரசாயன உரப்பாவனை அதிகரித்து குடிநீரும் விவசாய உற்பத்திப் பொருட்களும் நஞ்சுத்தன்மையை அடைந்து இலங்கை மக்கள் ஆரோக்கியம் கெட்டு நோயாளிகளாகின்றனர் .

விவசாயிகள் பசளைத் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து இரசாயன உரங்களை இறக்குமதி செய்யவேண்டியுள்ளது . அந்நியச் செலாவணி வீணாகின்றது . இலங்கையின் பௌத்த , இந்து சமயங்களும் வழிபாட்டு விடயங்களும் சீரழிக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றன .

எனவே இலங்கையில் 70 வீத பௌத்த சிங்கள 15 வீதமான தமிழ் மக்களுமாக மொத்தம் 85 வீதமான மக்களது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து உடனடியாக பசுவதை செய்தலையும் மாடுகளைக் கொல்லுவதையும் முற்றாகத் தடைசெய்து உதவுமாறு வேண்டுகின்றோம் .

பசுவதைக்கான தண்டனையையும் அதிகாரிக்குமாறும் வேண்டுகின்றோம் . 2014 ஆம் ஆண்டு சிவராத்திரி விரத பிரார்த்தனையாகவும் பசுவதை தடைசெய்தலை முன்னெடுக்கின்றோம் . இதேபோல் பசுவதையைத் தடைசெய்வது தொடர்பாக ஆன்மிக ரீதியான அடையாள உண்ணா நோன்பையும் மேற்கொள்வோம் என்றுள்ளது .

0 Response to "இறைச்­சிக்­காக மாடு­களை கொல்­வதை உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்­த­வேண்டும். சகல சமய நிறு­வ­னங்­களின் இணை­யத்­தினர் கோரிக்கை"

Post a Comment