Latest Updates

Categories Post

முள்ளியவளையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட குமாரபுரம் கிராமத்தின்
நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த பெண் தனது வீட்டில் உள்ள குப்பைகளை ஒன்று சேர்த்து தீமூட்டிய போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் , படுகாயமடைந்த அந்த பெண் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

0 Response to "முள்ளியவளையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்."

Post a Comment