Latest Updates

Categories Post

யாழில் ஒரு வார காலத்தில் மோட்டார் சையிக்கில்களில் வரும் இளைஞர் குழுவினால் ஆறு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகள் அபகரிப்பு.

கடந்த ஒரு வார காலத்தில் மோட்டார் சையிக்கில்களில் சென்று தனிமையில் செல்லும்
பெண்களின் நகைகளை திருடும் இளைஞர் குழுவினால் சுமார் ஆறு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தங்க நகைகள் அபகிரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரதம பொலிஸ் பரிசோதகர் சி . ஆர் றொகான் பீரிஸ் தொவித்துள்ளார் .

யாழ்ப்பாணம் ஊடகவியலாளாகளுக்கு வாராந்தம் நடைபெறும் பொலிஸ் உடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது .

இதன்போது கருத்துக் கூறுகையில் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்லாலைப் பகுதியில் மோட்டார் சையிக்கில்களில் சென்ற பெண்ணின் சுமார் மூன்றரை லட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி , காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கோவிலுக்கு சென்ற பெண்னின் சுமார் ஓரு லட்சம் ரூபா பெறுமதியான சங்கிலி , மானிப்பாய் பொலிஸ் பிரிவில் சங்குவேலிப் பகுதியில் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சங்கிலியும் திருடப்பட்டுள்ளதாகவும் , குறிப்பிட்ட களவுகள் சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் புலன் விசாரனைகள் நடை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் .

0 Response to "யாழில் ஒரு வார காலத்தில் மோட்டார் சையிக்கில்களில் வரும் இளைஞர் குழுவினால் ஆறு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகள் அபகரிப்பு."

Post a Comment