Latest Updates

Categories Post

விபச்சாரிகளுக்கு எதிராக சீனாவில் நீளுகிறது கை!


“பாவக்காரர்களின் நகரம்” என்று பேசப்படுகின்ற நகரிலுள்ள விபச்சாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டின் பின்னர், விபச்சாரத் தொழிலை முற்று முழுதாக ஒழிப்பதற்காக நாடெங்கிலும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சீன அரசு பொலிஸாருக்கு ஆணையிட்டுள்ளது.

டொன்குவன் மாகாணத்தில் விபச்சாரத் தொழில் எந்தளவு தூரத்திற்கு முன்னேறியுள்ளது என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளதன் பின்னர், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், டென்குவான் பொலிஸ் தலைமை அதிகாரியும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டென்குவானில் விபச்சாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாடெங்கிலும் விவாதத்திற்குள்ளாகியுள்ளதுடன், பாலியல் தொழிலில் உதவுபவர்களின் நிலைகுறித்து பெரும்பாலானோர் அநுதாபம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Response to " விபச்சாரிகளுக்கு எதிராக சீனாவில் நீளுகிறது கை! "

Post a Comment