Latest Updates

Categories Post

தோடம்பழங்களுக்குள் மறைத்து ஹெரோயின் கடத்திய பாகிஸ்தான் நபர் கைது.


தோடம்பழங்களுக்குள் சூட்சமமான முறையில் மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின்
போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் .

விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லிகாமினி தெரிவித்தார் . சந்தேகநபர் 12 தோடம்பழங்களுக்குள் ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு எடுத்து வந்துள்ளார் .

ஒரு தோடம்பழத்துக்குள்ளும் 80 கிராமுக்கு மேல் ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று ஊடகப் பேச்சாளர் கூறினார் . இதற்கமைய சந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது . மீட்கப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபா என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது .

0 Response to "தோடம்பழங்களுக்குள் மறைத்து ஹெரோயின் கடத்திய பாகிஸ்தான் நபர் கைது."

Post a Comment