Latest Updates

Categories Post

தெல்லிப்பளையில் குளிர்பானம் திருடிய பெண்கள்!


நவநாகரீகமான முறையில் வியாபார நிலையமொன்றில் பொருட்கள் வாங்க வந்த இரண்டு பெண்கள் அங்கிருந்த இரண்டு குளிர்பானப் போத்தல்களைத் திருடி அகப்பட்டுக் கொண்ட சம்பவமொன்று தெல்லிப்பளையில் நேற்று (11-02-2014) இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வியாபார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருபெண்கள் வியாபார நிலைய உரிமையாளரிடம் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த பெண்கள் கேட்ட பொருள் ஒன்றினை எடுப்பதற்காக வியாபார நிலைய உரிமையாளர் நிலையத்தின் பின்பக்கம் சென்றவேளை, குறிப்பிட்ட இருபெண்களும் கடையின் முன்னால் இருந்த இரண்டு பெரிய குளிர்பானப் போத்தல்களை திருடி மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழுள்ள பொருள் வைக்கும் இடத்தில் வைத்துள்ளனர்.

இதனை தூரத்தே நின்று அவதானித்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் உடனடியாக ஓடி வந்து உரிமையாளரிடம் இது பற்றித் தெரிவித்துள்ளனர். உரிமையாளர் குறிப்பிட்ட பெண்களின் மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழு;ப்பகுதியினைச் சோதனை செய்து பார்த்த போது 2 குளிர்பானப் போத்தல்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார்.

0 Response to "தெல்லிப்பளையில் குளிர்பானம் திருடிய பெண்கள்!"

Post a Comment