யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்பட்ட ஆவாவை
( வினோதன் ) எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
யாழ் . குடாநாட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருக்கும் ஆவா குழுவின் தலைவனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் . நீதிமன்ற நீதவான் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார் .
குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கோப்பாய் மற்றும் அச்சுவேலிப் பொலிஸாரினால் கடந்த மாதம் 5 ஆம் திகதி 15 பேர் கைது செய்யப்பட்டனர் . அவர்களில் 11 பேர் யாழ் . நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜயர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் .
வழக்கு கடந்த 31 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 8 பேர் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டு மூவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது .
இதன்படி குறித்த வழக்கு நீதவான் சிவகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது . வழக்கினை விசாரணை செய்த நீதவான் ஆவாவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் மற்றைய இருவரையும் பிணையில் செல்லவும் உத்தரவிட்டுள்ளார் .
Categories Post
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "ஆவாவிற்கு தொடர்கிறது விளக்கமறியல்...."
Post a Comment