Latest Updates

Categories Post

பொகவந்தலாவையில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!


பொகவந்தலாவவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை மோரா கீழ்பிரிவு தோட்டத்தில் 17வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது சித்தப்பா வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சிறுமி ஹட்டன் பிரதேசத்தில் மகளிர் பாடசாலையில் கல்வி கற்று, கல்வி பொதுதாரதர சாதாரண தர பரீட்சை எழுதி தனது பேறுபேற்றுக்காக எதிர்பார்த்து இருந்தமை குறிப்பிடதக்கது.

தற்கொலை செய்து கொண்டுள்ள சிறுமி சிவபாலன் ஜனுசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாத்தறை தெனியாய பிரதேசத்தில் உறவினரான இளைஞன் ஒருவரோடு காதல் தொடர்பு காரணமாக இந்த தற்கொலை நேர்ந்திருக்கலாம் எனவும் சிறுமியின் கை யெழுத்தினால் எழுதபட்ட டயரி ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Response to "பொகவந்தலாவையில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!"

Post a Comment