Latest Updates

Categories Post

ராஜீவ் கொலை வழக்கு. தமிழக முதல்வர் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக
முதல்வர் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் .

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்து முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார் . இதை , எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்று பேசினர் .

ராஜீவ் காந்தி உட்பட 18 பேர் ஸ்ரீபெரும்புத்தூரில் கொல்லப்பட்டார்கள் . அந்த 18 பேருக்கு என்ன நியாயம் கிடைக்கும் என்று இதன்போது காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் கேள்வியெழுப்பினார் .

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் .

சென்னை நிருபர் .

0 Response to "ராஜீவ் கொலை வழக்கு. தமிழக முதல்வர் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு."

Post a Comment