Latest Updates

Categories Post

மாமரத்தில் தொங்கியபடி இளைஞர் ஒருவரின் சடலம் யாழ். பொலிஸாரினால் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி ஓட்டுமடம் பகுதியில் மாமரத்தில் தொங்கியபடி
இளைஞர் ஒருவரின் சடலம் யாழ். பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் அவரது வீட்டின் முன்புறம் நின்ற மாமரத்தில் தூகிட்டு தற்கொலை செய்துள்ளார். இத் தற்கொலைக்கு காதலில் ஏற்பட்ட பிரிவே காரணம் எனத் தெரியவருகிறது.
 
மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தைச் சேர்ந்த அரிச்சந்திரன் விக்னேஸ்வரன் வயது 23 என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
 
சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில்
 
அயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் விக்னேஸ்வரனின் காதல் விவகாரத்திற்கு வீட்டார் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும் இருப்பினும் குறித்த இளைஞன் ஒருவார காலமாக மனம் உடைந்து விரக்தியான மனோநிலையில் காணப்பட்டதாகவும் அதற்கான காரணம் என்ன என்று தங்களுக்கு புரியாத நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் குற்ற தடய நிபுணத்துவ பொலிசார் மற்றும் யாழ். பொலிஸ்நிலைய பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ் நிருபர்.

0 Response to "மாமரத்தில் தொங்கியபடி இளைஞர் ஒருவரின் சடலம் யாழ். பொலிஸாரினால் மீட்பு"

Post a Comment