Latest Updates

Categories Post

யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிப பெண் ஒருவர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

அரியாலை ஆசிர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிப பெண்ணே டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்ட பகுதியில் புகையூட்டல் செய்துள்ளார்கள் .

இதன் காரணமாக சற்று இந்தப் பகுதியில் பதற்றமான நிலமை காணப்பட்டது .

யாழ் நிருபர் .

0 Response to "யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டார்."

Post a Comment