Latest Updates

Categories Post

மகசின் சிறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை வடமராட்சியில் இறுதிக் கிரியைகள்!

சிறீலங்காவின் சிறைச்சாலையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழ் கைதியின் ஈமைக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வடமராட்சியில் நடைபெறவுள்ளது.

விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய பிரஜையின் சடலம் நேற்று முன்தினம் சிறைச்சாலையின் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்டது.அவர் மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விஸ்வலிங்கம் கோபிதாஸ் மரணத்தினைத் தொடர்ந்து அவரது மனைவி, மற்றும் இரு பிள்ளைகள் கொழும்பு சென்றுள்ளார்கள்.பூதவுடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புலோலி மந்திகையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.விஸ்வலிங்கம் கோபிதாஸ் சிறீலங்கா அரசின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.

0 Response to " மகசின் சிறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை வடமராட்சியில் இறுதிக் கிரியைகள்!"

Post a Comment