Latest Updates

Categories Post

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 10ம் திகதி வெளியிடப்படும்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வெளியிடப்பட உள்ளது.

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆறு லட்சம் மாணவ மாணவியர் தோற்றினர்.

2013ம் ஆண்டுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

1163 பரீட்சை நிலையங்களில் 157551 மாணவ மாணவியர் செயன்முறைப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

0 Response to "சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 10ம் திகதி வெளியிடப்படும்!"

Post a Comment