Latest Updates

Categories Post

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம்.

ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் நளினி , முருகன் , பேரறிவாளன் , சாந்தன் ஆகியோருக்கு
தூக்கு தண்டனை வழங்கப்பட்டது . இந்நிலையில் நளினிக்கு தூக்கு இரத்தாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது .

நேற்று , முருகன் , பேரறிவாளன் , சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு இரத்து ஆனது .

அத்துடன் , இந்திய மத்திய , மாநில அரசுகள் முடிவெடுத்தால் இவர்களை விடுதலை செய்யலாம் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது .

இதையடுத்து , தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் , பேரறிவாளன் , முருகன் , சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு செய்து , வேலூர் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா .

வேலூர் சிறையில் உள்ள நளினியும் ( முருகன் மனைவி ) விடுதலை செய்யப்படுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் .

நளியுடன் சிறையில் உள்ள ஜெயச்சந்திரன் , ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார் .

இந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டார் .

சென்னை நிருபர் .

0 Response to "முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம்."

Post a Comment