Latest Updates

Categories Post

44 ஆண்டுகளாக இறந்து போன சிசுவை வயிற்றிலேயே சுமந்து கொண்டிருக்கும் பிரேசில் பாட்டி!

பிரேசில் நாட்டை சேர்ந்த 84 வயது பெண்ணுக்கு பல ஆண்டாக வயிற்று வலி ஏற்பட்டு தொல்லை கொடுத்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டார்.
இந்த வலியானது அவரது 40-வது வயது பிரசவ காலத்தில் இருந்தே தொடர்கதையாக இருந்தது. சமீபத்தில் மருத்துவமனையில் அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்த போது கருப்பைக்கு வெளியே சிசு உருவாகி உயிரற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிசுவுக்கு 20-28 வாரம் இருக்கலாம். கை-கால், முதுகெலும்பு, விலா எலும்பு ஆகியவை உருவாகி இருக்கிறது. இதுபற்றி டாக்டர் கூறுகையில், ‘இதுபோல சில பெண்களுக்கு கருப்பைக்கு வெளியே சிசு உண்டாவதுண்டு.
இந்த மூதாட்டியின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு சுமார் 44 ஆண்டுக்கு முன்பு உருவானது. அது இறந்து விட்டதால் அதை சுற்றிலும் கால்சியம் படிந்திருக்கிறது. பொதுவாக இதை ‘ஸ்டோன் பேபி’ என்று அழைப்பார்கள்’ என்கிறார். சிசுவை அகற்ற மூதாட்டி மறுத்து விட்டார்.

0 Response to "44 ஆண்டுகளாக இறந்து போன சிசுவை வயிற்றிலேயே சுமந்து கொண்டிருக்கும் பிரேசில் பாட்டி!"

Post a Comment