Latest Updates

Categories Post

முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் “காணி உரிமை மீட்புக்கான அமைப்பு” உருவாக்கம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் " காணி உரிமை மீட்புக்கான அமைப்பு " கடந்த 14 ஆம்
திகதி அன்று உருவாக்கம் பெற்றுள்ளது .

புதுக்குடியிருப்பு 4 ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடி , தத்தம் பிரதேச வாழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பிலும் , அரசு மற்றும் அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனிநபர் - பொதுத்தேவை காணிகள் தொடர்பிலும் கலந்தாலோசித்த பின்னர் குறித்த அமைப்பை உருவாக்கியுள்ளனர் .

வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி . சிவமோகனின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இவ் அமைப்பின் வழி நடத்தல்

செயலராக வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி . சிவமோகனும் , வழி நடத்தல் ஆலோசகர்களாக வடமாகாணசபை உறுப்பினர்கள் கனகசுந்தரசுவாமி , மேரிகமலா குணசீலன் ஆகியோரும் , கிராம மட்ட செயல்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர் .

இதேவேளை இக் கலந்துரையாடலில் அமைப்பின் தீர்மானங்களாக நீண்ட காலமாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்த காணிகளில் , இராணுவம் பலாத்காரமாக குடியிருக்கும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளல் .

நீண்ட காலமாக எமது மக்கள் ஆண்டு அனுபவித்தும் , அவர்களுக்கான காணி உரித்து பத்திரங்கள் இதுவரை வழங்கப்படாதிருப்பதை கண்டிப்பதோடு , அவர்களுக்குரிய காணி உரித்து பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் . பிரதேசசபைகள் , பாடசாலைகள் , சனசமூக நிலையங்கள் என்பவற்றுக்குரிய காணிகள் , கட்டடங்களில் குடியிருக்கும் இராணுவத்தினரை வெளியே ற்றி அவற்றை விடுவிக்க நடவடி க்கை மேற்கொள்ளல் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன .

முல்லை நிருபர் .

0 Response to "முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் “காணி உரிமை மீட்புக்கான அமைப்பு” உருவாக்கம்."

Post a Comment