Latest Updates

Categories Post

ஜனவரியில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 164 பேர் உயிரிழப்பு.

வீதி விபத்துக்களினால் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 164 பேர் இறந்துள்ளதாக ஆளும்
தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார் . 2012 ல் 2444 பேரும் , 2013 ல் 2339 பேரும் வீதி விபத்துக்களினால் இறந்ததாகவும் அவர் தெரிவித்தார் .

வாய்மூல விடைக்காக அனோமா கமகே எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலை சபையில் சமர்ப்பித்த அமைச்சர் , ஜனவரி மாதத்தில் 2920 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன .

2012 ல் 42.145 விபத்துக்கள் இடம்பெற்றுள்ள தோடு இதனால் 286 பேர் அங்கவீனமுற்றனர் . 2013 ல் 39.801 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு , இதனால் 320 பேர் அங்கவீனமடைந்தனர் . மோட்டார் சைக்கிள் விபத்துக்களே கூடுதலாக இடம்பெற்றுள்ளன . வேகமாகவும் கவனமின்றியும் ஓட்டுவதாலே விபத்துக்கள் கூடுதலாக நடந்து வருகின்றன .

கொழும்பு நிருபர் .

0 Response to "ஜனவரியில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 164 பேர் உயிரிழப்பு."

Post a Comment