Latest Updates

Categories Post

ஆனந்தபுரம் மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கப்படுகின்றது.

குடிதண்ணீர்த் தாங்கிகளுக்குப் பாதுகாப்பு வழங்க கிராம முன்னேற்றச் சங்கம் முன்வந்ததைத்
தொடர்ந்து ஆனந்தபுரம் மக்களுக்குப் புதுக்குடியிருப்பு பிரதேசசபையால் குடிதண்ணீர் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றது .

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஆனந்தபுரம் கிராம மக்களுக்கு 12 மாதங்களும் குடிதண்ணீர் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் பிரதேசசபையால் தண்ணீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டுக் குடிதண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது .

அங்கு வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் தாங்கிகளில் இரு தாங்கிகள் மாயமாய் மறைந்ததுடன் ஒரு தாங்கி சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த குடிதண்ணீர் பிரதேசசபையால் நிறுத்தி வைக்கப்பட்டது .

இதை அடுத்து குடிதண்ணீர் தாங்கிகளுக்கான பாதுகாப்பை கிராமஅபிவிருத்திச் சங்கம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தாங்கிகள் வைக்கப்பட்டு மீண்டும் பிரதேச சபையினால் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகச் செயலாளர் தெரிவித்துள்ளார்

0 Response to "ஆனந்தபுரம் மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கப்படுகின்றது."

Post a Comment