Latest Updates

Categories Post

தாயின் நோய் சுகமடையாததால் மனக்குழப்பத்திற்கு ஆளான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 தனது தாயின் நோய் சுகமடையாததால் மனக்குழப்பத்திற்கு உள்ளான 34 வயதுடைய திருமணமாகாத இளைஞர் ஒருவர் அது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தங்கொட்டுவ பன்னல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு நேற்று மாலை தான் பணியாற்றும் ஆடைத் தொழிற்சாலையில் வைத்து தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த இளைஞன் மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து தொழிற்சாலையின் ஓய்வு மண்டபத்தில் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். இவ்வேளை தனது நண்பர்கள் இருவரையும் சற்று வெளியே நிற்குமாறு கூறி அவர்களை வெளியில் அனுப்பிவிட்டு நைலோன் கயிறு ஒன்றினால் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டுள்ளதாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞருக்கு அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதம் ஒன்றில் தனது தாய் நீண்ட காலமாக நோயினால் கஷ்டப்படுவதாகவும், அந்நோய்க்காக பல வைத்தியங்கள் செய்த போதிலும் நோய் சுகமாகவில்லை எனவும் இதனால்தான் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

0 Response to "தாயின் நோய் சுகமடையாததால் மனக்குழப்பத்திற்கு ஆளான இளைஞர் தூக்கிட்டு தற்கொலை"

Post a Comment