Latest Updates

Categories Post

மீசாலையில் புதிய புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்.


சாவகச்சேரி - மீசாலையில் புதிய புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற
வாகன விபத்தில் இருவர் படுகாயடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர் . சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ரக்டர் வாகனம் ஒன்று ஏ 9 வீதியை வேகமாக கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது .

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் .

சம்பவத்தில் வெள்ளாம்போக்கட்டியைச் சேர்ந்த இராசப்பு அருந்தவராசா ( 33 ) சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த முருகேசு கணேஸ்குமார் ( 34 ) ஆகியோரே படுகாயடைந்துள்ளனர் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர் . விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் சாரதியைச் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்

0 Response to "மீசாலையில் புதிய புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்."

Post a Comment