வடக்கில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு- அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பிரதேச செயலகங்களில் புதிய பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த தெரிவித்துள்ளார்.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் இந்த பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கமைய வடமாகாணத்தின் 23 பிரதேச செயலகங்களில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

0 Response to " வடக்கு பிரதேச செயலகங்களில் சிறுவர் பாதுகாப்புப் பிரிவு! "
Post a Comment