சென்னை : ராஜிவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இருக்கும் நளினி, ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்.
வழக்கு விபரம் : முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ல், ஸ்ரீபெரும்புதூரில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.பின், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், தூக்கு தண்டனையை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், கருணை மனு தாக்கல் செய்தனர்.ஆனால், இவர்களின் மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று பேரும், இது தொடர்பாக, ஜனாதிபதிக்கு, நினைவூட்டல் கடிதங்களை, தொடர்ந்து அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், இவர்களின் கருணை மனுக்களை, அப்போது ஜனாதிபதியாக இருந்த, காங்., கட்சியைச் சேர்ந்த, பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து, 2011, செப்டம்பர், 11ல், இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.இதற்கிடையே, கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க கோரி, மூன்று பேரும், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட், தூக்கு தண்டனையை நிறைவேற்ற, இடைக்கால தடை விதித்தது.இந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, 'பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ரத்து செய்வதோடு, ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்படுகிறது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து, மாநில அரசு முடிவு செய்யலாம்.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும், 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு, 432 மற்றும் 433ன் படி, மாநில அரசு, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
தமிழக அமைச்சரவை முடிவு : குற்றவாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்ததை அடுத்து இவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று அவசாரமாக கூடியது. இதில் 110 விதியின் கீழ் பேசிய ஜெயலலிதா, ராஜிவ் கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் சிறையில் இருந்த விடுதலை செய்யப்படுவர்; வேலூர் சிறையில் இருக்கும் முருகனின் மனைவி நளினி, ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவர்; இவர்கள் 7 பேரும் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும்; தமிழக அரசின் பரிந்துரை மீது 3 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்யவிட்டால், அரசியலைப்பு சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தமிழக அரசே இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளா
Categories Post
Home » India
» ராஜிவ் கொலையாளிகள் 3 பேரும் சிறையில் இருந்து விடுவிப்பு : நளினியையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு
ராஜிவ் கொலையாளிகள் 3 பேரும் சிறையில் இருந்து விடுவிப்பு : நளினியையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு
Posted by kesa
on Tuesday, February 18, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "ராஜிவ் கொலையாளிகள் 3 பேரும் சிறையில் இருந்து விடுவிப்பு : நளினியையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு"
Post a Comment