முல்லைத்தீவு , துணுக்காய் பிரதேசத்தில் ஆயிரத்து 107 குடும்பங்கள் குடிநீர் வசதிகள்
இன்றியும் ஆயிரத்து 96 குடும்பங்கள் மலசலகூட வசதிகள் இன்றியும் பாதிப்படைந்துள்ளனர் என துணுக்காய் பிரதேச செயலகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு , துணுக்காய் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்திகள் தொடர்பாகவும் தேவைகள் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட இவ்வாண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
இந்நிலையில் , ஆயிரத்து 954 குடும்பங்கள் தனியான மலசலகூடங்களை பயன்படுத்துகின்றன .
ஆனால் இன்னமும் ஆயிரத்து 96 குடும்பங்களிற்கு மலசலகூட வசதிகள் தேவையாகவுள்ளது . இவ்விடயம் தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலாளர் எஸ் . குணபாலன் கருத்துத் தெரிவிக்கையில் ,
இவ்வாண்டிலேயே இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 456 பயனாளிகளுக்கு வீட்டுடன் கூடிய மலசலகூடங்களும் பிறிதொரு திட்டத்தின் ஊடாக 40 மலசலகூடங்களும் அமைக்கப்படவுள்ளன .
188 தனிபட்ட கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் , 72 புதிய கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன .
இவை தவிர , 438 கிணறுகள் திருத்தப்படவேண்டியுள்ளதுடன் 1107 குடும்பங்கள் குடிதண்ணீர்க் கிணறுகள் இன்றி வாழ்ந்து வருகின்றன . இவ்வாண்டுத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களின் ஊடாக நான்கு கிணறுகள் அமைக்கப்படவுள்ளன என்றார் .
Categories Post
துணுக்காயில் 2,203 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி அவதி.
	
	Posted by kesa
on Thursday, February 20, 2014, 
 Add Comment 
Subscribe to:
Post Comments (Atom)
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 

0 Response to "துணுக்காயில் 2,203 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி அவதி."
Post a Comment