Latest Updates

Categories Post

சட்­ட­வி­ரோத மது­பான உற்­பத்­தியால் சமூகவிரோ­தச் ­செ­யல்கள் அதி­க­ரிப்பு. கிளி­நொச்­சியில் சமூக ஆர்­வ­லர்கள் கவலை.

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும்
அதிகரித்துக் காணப்படுவதுடன் சமூகச் சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர் .

கிளிநொச்சி , பரந்தன் , கோரக்கன்கட்டு , பூங்காவனச்சந்தி ஆகிய இடங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துக்காணப்படுவதுடன் சமூகச் சீர்கேடுகளும் சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன .

பரந்தன் பகுதியில் ஏ - 35 வீதியை மையமாகக்கொண்ட பூங்காவனச்சந்தி , கோரக்கன்கட்டு ஆகிய பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கசிப்பு விற்பனை இடம்பெற்று வருகின்றது .

இது நடமாடும் வியாபாரமாகவும் இடம்பெறுவதுடன் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது .

இதனை விட மாலை 6 மணிக்குப் பின்னர் பலரும் வயது வேறுபாடுகளின்றி மதுபோதையில் தள்ளாடித்திரிவதைக் காணமுடிகின்றது . பல்வேறு சமூகச் சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றன . உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்திலெடுத்து இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 Response to "சட்­ட­வி­ரோத மது­பான உற்­பத்­தியால் சமூகவிரோ­தச் ­செ­யல்கள் அதி­க­ரிப்பு. கிளி­நொச்­சியில் சமூக ஆர்­வ­லர்கள் கவலை."

Post a Comment