தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் தவறுகளால் அக்கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிந்து சென்றுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆனந்த சங்கரி டக்ளஸ் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்று முன்தினம் யாழில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் வடக்குக் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் வைத்து சம்பந்தனுக்கு வழங்கியுள்ள கடிதத்தில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடைய கடித்தில்,
தமிழ் தேசயக் கூட்டமைப்பு காட்சி சார்பிலான வினைத்திறனான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபாடாமை, தலைமைகளின் தன்னிச்சையான செயற்பாடுகளால் கூட்டமைப்பிலிருந்து ஆனந்த சங்கரி விலகிச் சென்றுள்ளார்.
அவர் தற்பொழுது டக்ளஸ் தலைமையில் அமையவுள்ள கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அவர் இணைவாராயின் அந்தக் கூட்டமைப்பிற்கு ஊடகங்களும் முக்கியத்துவம் வழங்கலாம்.
இவ்வாறான நிலையில் கூட்டமைப்பினுள் பிரச்சினைகள் உருவெடுக்கக் சுடிய சூழல் காணப்டுவதுடன் கட்சியியும் பலமிழக்கலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு தங்களே பொறுப்பாளியாக வேண்டியேற்படும்.
இதேபோல் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற பொழுது தேர்தலின் பின்னர் வடமாகாண சபையை சிறப்பாகச் செயற்படுத்துவதற்கு குழுவை அமைப்பது தொடர்பாக முன்னர் ஆராயப்பட்டிருந்தது.
ஆனால் இன்னமும் இக்குழுவும் அமைக்கப்படவில்லை. இதனால் வடக்கு மாகாண சபையின் செற்பாடுகள் மந்தமடைந்துள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே அக்குழுவையும் விரைவாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

0 Response to "சங்கரியை டக்ளஸ் பக்கம் தள்ளும் சம்பந்தன்."
Post a Comment